தூபியை இடித்தழித்தமை தவறு இல்லை – பீரிஸ்

யாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது.என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீண்டும் நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னரே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக சட்டத்துக்கு மாறாக, அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானமொன்று அகற்றப்பட்டமை தொடர்பில் விவாதிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த நினைவுத் தூபி அகற்றப்பட்டதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை என்றும், மாணவர்களின் ஒற்றுமையே கருத்தில்கொள்ளப்பட்டது என்றும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுனார்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரது எதிர்ப்புக் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நிர்மாணிக்க வாக்குறுதியளித்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir