தனிமைப்படுத்தலை மீறினால் இரு ஆண்டுகள் கடூழியச் சிறை

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும் என பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் உட்பட ஊரடங்கு தளர்வின்போது நடந்துகொள்ளவேண்டிய விதம் பற்றி விபரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சால்   வெளியிடப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளை திங்கட் கிழமை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்படவுள்ளன. அதற்கான வழிகாட்டல்களும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

எவ்வித பாதிப்பும் இன்றி நாட்டை கட்டம், கட்டமாக இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கிலேயே புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir