பெண் அதிகாரிக்கு கொரோனா

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வருகின்ற பெண் காவல்துறை அதிகாரிக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் ஹல்துமு்ல – ஹால்அட்டுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஹல்துமுல்ல சுகாதார சேவைப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் காவல்துறை அதிகாரி நேற்றுமுன்தினம் வீடு திரும்பிய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது அறிக்கை இன்று வெளியானது. அதற்கு முன் அவரது திருமண விவகாரங்களுக்காக ஹல்துமுல்ல பிரதேசத்தின் பல இடங்களுக்கும் சென்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனாத் தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir