பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளர் மீது தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியுள்ளனர்.

மேலும் விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று . தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .

இது தொடர்பில் பொத்துவில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . தவிசாளர் மாற்றம் ஏற்பட இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir