ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அமைப்பாளர்களின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இதன் முதலாவது கட்ட செயலமர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 32 தேர்தல் தொகுதிகளில் இடம்பெற்றன.

பிரதான கட்சி பிரநிதிகளின் செயலமர்வுகளுக்கு மேலதிகமாக மகளிர், இளைஞர் உள்ளிட்ட ஏனைய 61 அமைப்புக்களின் செயலமர்வுகளும் இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சுகாதார வழிமுறைகளுக்கு இன்று ஆரம்பமாகவுள்ள செயலமர்வுகள் அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த செயலமர்வுகளில் கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir