யாழ்ப்பாணத்துக்கு முதலில் கொரோனா வைரஸ்ஸை பரப்பியவர் சுவிஸில் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்

1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார்.

அங்கு மதபோதகராக பணியாற்றி வந்த நிலையில் , திடீரென போதகர் சற்குணராஜா உயிரிழந்துள்ளமை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir