10 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று!

வவுனியா வடக்கு பகுதியில் மாரா இலுப்பை கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்துவரும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரது மகளான 10 வயதான சிறுமிக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir