மேலும் 245 பேர் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் இன்று (20) காலை, சிறப்பு விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைய குறித்த அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir