ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

4 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெரல் சங்க என்பவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதாகியுள்ளவர் சில வருடங்களுக்கு முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் உறுப்பினரான டி.மஞ்சுவை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir