எல்ல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்!

புரட்சி தமிழர் பேரவையின் எல்ல பிரதேச சபையின் உறுப்பினர் என். சுரேஸ் மீது குழுவொன்றினால் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல காவற்துறையினர் தெரிவித்தனர்.

காணி தொடர்பிலான தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்குதலை மேற்கொண்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir