இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள விமான நிலையங்கள்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீள நாட்டிற்கு அனுமதிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது.எனினும், முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக யுக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir