ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை !

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை இன்று(22) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 278 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்றாளராக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், 633 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 48,617 ஆக உயர்வடைந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir