வவுனியாவில் மேலும் 12தொற்றாளர்கள்:எண்ணிக்கை 287ஆகியது

வவுனியாவில் 15பேருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு  பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் நேற்று வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 12பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது. நேற்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து நாட்களில் 287 ஆக  அதிகரித்துள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir