வவுனியாவில் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது வீடு நோக்கிசென்றுள்ளார்.இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir