சுமந்திரனின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம் – செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்கருத்தை  வன்மையான கண்டிப்பதுடன், குறித்த விடையம் தொடர்பில் தமிழரசு கட்சி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரி நிற்கின்றது என கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்….
தழிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தார் . அதில் ஒட்டுமொத்தமான ஆயுதப்போராட்டத்தினை தவறு என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டமாகும்.  அயுதம் ஏந்தி போராடி இலங்கை அரசினை பணியவைத்து அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடனே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அப்படியான வரலாற்றுப்பின்னணியைக் கொண்ட கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் இப்படியான கருத்துக்களை தெரிவிக்கலாகாது. அதனை நங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆயுதப்போராட்டத்திலே பொதுமக்கள் , போராளிகள் ஒட்டு மொத்தமாக தங்கள் உயிரினை அர்ப்பணித்துள்ளார்கள்.
ஆயுதப்போராட்டத்தினூடாகவே தமிழ் மக்களிடைய பிரச்சினைகள் உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயுதப் போராட்டத்தினூடாகவே இலங்கை அரசாங்கத்துடன் எமது பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுமந்திரன் அவர்களுக்கு தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழரசு கட்சி இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரி நிற்கின்றது. என தெரிவித்துள்ளார்.
Attachments area

You May Also Like

About the Author: kalaikkathir