நாட்டுக்கு வரவுள்ள 500,000 தடுப்பூசிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 க்கும் மேற்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் தடுப்பூசி தொகையானது நாளை மறுதினம் நாட்டை வந்தடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவில் இருந்து 600,000 தடுப்பூசிகள் பெறப்படும் என கூறியிருந்தார்.

எவ்வாறெனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவையும், கடந்த ஆண்டு கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு, 500,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை தடுப்பூசி வழங்குவது தொடர்பான அடிப்படை ஒத்திகை தற்போது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டிற்கு கிடைக்கவுள்ள தடுப்பூசி தொகையில், முதலாவது கட்டம் கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு பங்களிக்கின்ற முன்னணி உறுப்பினர்களுக்கு இதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ளதுடன் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமா கிடைக்கப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir