நாட்டில் நேற்றைய தினம் 755 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி!

நாட்டில் நேற்றைய தினம் 755 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 741 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

8 ஆயிரத்து 588 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir