மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி

கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறம் சுவருக்கு அடித்தளம் தோண்டும்போது 10 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir