கொட்டகலையில் விபத்து ; மூவர் படுகாயம்

நுவரெலியா- திம்புள்ள, கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொட்டகலை நகரில் இருந்து பத்தனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில், கொட்டகலை வூட்டன் பசாரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனிலும் மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தினால் மோட்டார் சைக்கிள்கள்  மற்றும் வேண் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை  திம்புள்ள- பத்தனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir