புகையிரதத்தில் மோதுண்டு 6 மாடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலேயே கால் நடைகள் மோதுண்டுள்ளன.

இந்த சம்பவத்தில் ஐந்து பசுக்கள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பசுக்கள் காயமடைந்துள்ளன.

உயிரிழந்த பசுக்களின் சடலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த பசுக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான புகையிரத வீதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் இவ்வாறு உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir