394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு

நாட்டில் மேலும் 394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 61 ஆயிரத்து 980ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 963 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 55ஆயிரத்து 398 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 285 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 297 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir