சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் தொடர் போராட்டம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது.

சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபா வேதனம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று பொத்துவில் பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம், இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது.

எனவே, அதற்கு தமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென ரிஷாட் பதீயுதீன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir