இலங்கையில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று  ஒரேநாளில் 11 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,778,206 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,461,706 குணமடைந்துள்ளனர்.

அத்துடன் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 865 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir