தெற்கு கடல் பிரதேசத்தில் திடீரென அதிகரித்த காற்றின் வேகம்

நாட்டின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசத்தில் நிலவும் மேகமூட்டம் காரணமாக மட்டக்களப்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டையூடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடுமெனவும் அத்திணைக்களம் தொிவித்துள்ளது.

இதனால் கடற் படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir