முடிவை எட்டும் வரை தொடரவுள்ள போராட்டம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி பொத்துவில்லில் ஆரம்பமான இந்த போராட்டம் நேற்று இரவு முல்லைத்தீவில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் முல்லைத்தீவில் இருந்து மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். மதத் தலைவர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குயேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir