வைத்தியசாலை பின்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவர் சடலம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக   இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir