நாட்டின் இன்றைய வானிலை!

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் (08) பல தடவைகள் மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (08) பி.ப. 2.00 மணியின் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அநேக பகுதிகளில் 50 மி.மீ. அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையின்றிய காலநிலை நிலவக்கூடுமென அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வயம்ப மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டில் கிழக்கு சரிவுப் பிரதேசங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir