72,000ஐக் கடந்துள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை !

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 72,000ஐக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் 963 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 72,174 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 940 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 15 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 68,155 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 8 பேரும் கொவிட் நோயாளராக நேற்று கண்டறியப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 6,155 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 591 பேர் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,644 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir