கொரோனா தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரிக்கின்றமையானது, கொவிட் பரவல் மிகவும் அபாய நிலையில் உள்ளதை வெளிப்படுத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமந்த ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நோயாளர்கள் எண்ணிக்கை 500 முதல் 600 அளவில் பதிவான நிலையில், தற்போது 900 ஆக அதிகரித்துள்ளது.

இது மிகவும் கவனத்தில் எடுத்து, விஞ்ஞான ரீதியாக ஆய்வுசெய்யப்பட வேண்டிய காரணமாகும்.

அத்துடன், கொழும்புக்கு வெளி மாவட்டங்களின் அபாய நிலை தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir