இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை இன்றிய வானிலை நிலவக்கூடுமெனவும் அத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir