ஈஸ்ட்டர் தாக்குதல் -அறிக்கை பிரதியை வழங்க கோரிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

இதன்படி ,சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்காகவே சட்ட மா அதிபர் இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ,ஏப்ரல்21 தாக்குதல் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir