கிளிநொச்சியில் நடந்த கொடூரம் ஒருவர் பலி !

கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இந்த சம்பவ நடந்தேறியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.

மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிந்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir