கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஷ்வரன் தலைமையில் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுடன் இந்த மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நிலையில் பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) முற்பகல் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஷ்வரன் தெரிவித்ததாவது
மாணவர்களுக்கு பற் சிகிச்சையை சுயமாக வழங்குவதற்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் .
பற்சிகிச்சை பாடசாலைகளில் நடைபெற மாட்டாது .அதற்கான உணவு பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் .
கை கழுவும் முறைமைகள் போன்ற அடிப்படை தொற்று நீக்கி முறைகளை பின்பற்ற வேண்டும் , மேலதிக அறிவுரைகள் தேவைப்படின் பொது சுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு வருகை தந்து ஆலோசனைகளை வழங்கவும் தயாராக இருக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ , ஊழிர்களுக்கோ காய்ச்சல், தடிமல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறி தென்பட்டால் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் மருத்துவ ஆலோசனையை கடைப்பிடித்து சுகம் பெற்ற பின்னர் மீள திரும்பலாம் என்றார்.