கொரோனா – முன்னாள் சபாநாயகர் காலமானார்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார இன்று மாலை காலமானார்.

இறக்கும்போது அவருக்கு வயது 81.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் ஐ டி எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் நோய் தீவிரம் காரணமாக அவசர சிகச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை காலமானார்

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி முதல் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதி வரை இலங்கை நாடாளுமன்றத்தின் 18வது சபாநாயகராக அவர் கடமையாற்றியிருந்தார்.

1941ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி ஹப்புத்தளை பகுதியில் அவர் பிறந்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற பிரவேசத்தை 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர், சப்ரகமுவ மாகாண ஆளுநர், சபாநாயகர் என பல்வேறு பதவிகளை டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார வகித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir