இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கு சீனா வழங்கிய பதில்

யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் வர்த்தக ரீதியான ஒப்பந்தம், சீனாவின் தனியார் நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறித்த மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கியமை தொடர்பாக இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இலங்கையில் உள்ள சீன தூதரகம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது.

எந்த நாடாக இருந்தாலும் நிறுவனம் ஒன்றின் சட்ட ரீதியான உரிமைகளை பாதுகாப்பது முக்கியமானது என சீழன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir