‘மாஸ்க்’ அணிவதால் மேம்படும் சுவாசம்: ஆராய்ச்சியில் வந்த மகிழ்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முக கவசம் அணிய வேண்டும் என, ஓராண்டுக்கு மேலாக வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், முக கவசம் அணிவதால், சுவாசத்தையும் மேம்படுத்த முடியும் என, தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:முக கவசம் அணிவதால், கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும். அதே நேரத்தில், முக கவசம் அணியும்போது, நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அது ஆவிபிடிப்பதுபோல் செயல்பட்டு, சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் ஊக்குவிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir