உலகம் முழுவதும் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.93 கோடியை தாண்டியது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 109,382,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 2,411,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 81,464,545 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் தொற்று உறுதியாகி 25,355,132 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 25,408,088 பேர் லேசான அறிகுறிகளுடனும், 98,496 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, லண்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகம்.
உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போர் எப்போது நிறைவு பெறும் என கூற முடியாது என ஆய்வாளர்ககள் தெரிவிக்கின்றனர். மேலும் உலக அளவில் 3 வகையாக உருமாறியுள்ள கொரோனா மீண்டும் உறுமாறாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவே விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் வைரஸ் ஆபத்தானதாக உருமாற வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.