கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி- நாகேந்திரபுரம் பிரதேசத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்கு வந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன்  என்ற நபரே அறுவடை செய்த பின் நீராடுவதற்கு சென்றுள்ளார்.

நீராட சென்றவர் மீண்டும் வராத காரணத்தினால் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அப்போது அவரின் சடலம் கிணற்றிலிருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டிருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir