முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி!

கொத்மலை- ரத்மலபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (15) மாலை இடம்பற்றுள்ளதுடன், இதனால் 30 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் காயமடைந்த நபர் மருத்துவ சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir