நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

ஓன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, ராகம, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகள் என்பனவற்றில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், மாவட்ட வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள 38 வைத்தியசாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுகனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir