திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று முதல் ஆரம்பம்

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது.

திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

தவக்காலத்தின் போது ஒரு வேளை மட்டும் உண்பது, இரு வேளை பட்டினி கிடப்பது, மாமிசம் உண்ணாமலும் மது அருந்தாமலும் இன்ன பிற கேளிக்கைகளில் ஈடுபடாமலும் இருப்பது வளமையாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir