நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (22) சில நேரங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும்,  காலி, மாத்தறை  மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு அதிகளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir