மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ கூடும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொது மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இல்லை என்றால் மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா உட்பட ஏனைய மாவட்டங்களின் சேவை நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.எனினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் ஓரளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் நிறுவனங்களின் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம். அது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir