75110 பேர் குணமடைவு- 450 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இலங்கையில் நேற்று மட்டும் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 811 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தொற்று உறுதியானோரில் 4 ஆயிரத்து 667பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 450 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir