மியன்மார் மக்களை நாடு கடத்திய மலேசியா

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது.

மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது நாடுகடத்தலுக்கு எதிரான உத்தரவினை மலேசிய நீதிமன்றம் பிறப்பித்திருந்த போதும், அவற்றை புறந்தள்ளி அவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு 1086 பேர் மொத்தமாக நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், அவர்களை நாடுகடத்தி இருப்பது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir