நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு கொரோனா

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி 94 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சவுந்தர் ராகவன் தெரிவித்தார்.

குறித்த 12 பேரில், கொட்டகலை பகுதியிலுள்ள 3 பாடசாலைகலை சேர்ந்த 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 12 பேரில் 9 பேர் கொட்டக்கலை – ட்ரேட்டன் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சவுந்தர் ராகவன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir