சுற்றிவளைப்பில் 3,871 பேர் கைது

4 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,430 பேரும், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 562 பேரும், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,108 பேரும் மற்றும் துப்பாக்கியுடன் 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 607 வழக்குகளும், சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 146 வழக்குகளும் மற்றும் ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்கள் தொடர்பில் 6,173 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir