கைதாகியுள்ள மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் ஆரம்பம்

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

செய்தி சேவை ஒன்றிற்கு இதனை குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்று கரைதிரும்பாதிருந்த 12 மீனவர்கள், மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லைத்தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் குறித்த 12 பேரும் அந்தநாட்டின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவர்   செய்திசேவை ஒன்றுடன் தொடர்பு கொண்டு இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

கைதான மீனவர்கள் அங்கு அசௌகரிய நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் செய்தி பிரிவு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பபிட்டார்

You May Also Like

About the Author: kalaikkathir