அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (01) அதிகாலை 12.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களால் மேற்கொள்ளபபட்ட விஷேட நடவடிக்கையில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் வெவ்வேறு பகுதிளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கைது செய்யபட்ட 16 வயது மதிக்கதக்க இளைஞனிடமிருந்து 3 கிலோ 85 கிராம் கஞ்சாவினையும் கைது செய்யப்பட்ட 61 வயது மதிக்கத்தக்க முதியவரிடம் இருந்து1 கிலோ 890 கிராம் கஞ்சாவினையும் வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir