முஸ்லிம் திருமணச்சட்டத்தை மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது .

எனினும் இந்த வயது இனி 18 ஆக உயர்த்தப்படும். அத்துடன் திருமண சான்றிதழ்களில் இரு தரப்பினரும் கையொப்பங்களை வைப்பது கட்டாயமாக இருக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir